ராஞ்சி
பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு தண்டனை பற்றிய விவரம் அளிக்க சிபிஐ நீதிமன்ற மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளது.
பீகார் மாநிலம் தியோகர் அரசு கருவூலத்தில் இருந்து மாட்டு தீவினத்துகாக அளிக்கப்பட்டதாக ரூ. 89 லட்சம் முறைகேடு செய்ததாக சிபி ஐ வழக்கு தொடர்ந்துஅது. இந்த வழக்கில் குற்ரம் சாட்டப்பட்ட 34 பேர்களில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஒருவர் அப்ரூவர் ஆனார்.
கடந்த 23 ஆம் தேதி பீகார் முன்னாள் முதல்வர் லாலு உட்பட 15 பேர்களை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது லாலு பிர்ஸா முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கின் வழக்கறிஞர்களில் ஒருவரான விந்தேஸ்வரி ப்ரசாத் மரணம் அடைந்துள்ளார்.
அதை ஒட்டி நீதிமன்றம் இந்த தண்டை அளிப்பது பற்றிய தீர்ப்பை நாளை வரை ஒத்தி வைத்துள்ளது. இந்த தாமதம் அரசியல் நோக்கர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.