புதுக்கோட்டை:

ந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை எதித்து, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும்  ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்தது. சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பொதுமக்கள் என குவிந்து போராட்டத்தை கையிலெடுத்தனர்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டுக்கான ஆதரவாக அமைதியான போராட்டத்தின் காரணமாக, கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்னும் 15 நாளில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில்,    இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில்  இன்று தொடங்கப்பட்டது.

சுமார் 450 காளைகளுடன் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்ட  இந்த போட்டியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்துசிறப்புரை ஆற்றினார்.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி  இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறினார்.