கமதாபாத்

அதானி குழுமம் “தி ஒயர்” பத்திரிகை மீதும் பத்திரிகையாளர் பரஞ்ஜோய் குகா தாகுர்தா மீதும் தொடுத்த வழக்கை குஜராத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2017ஆம் வருடம் ஜூன் 17 ஆம் தேதி “தி எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி” என்னும் பத்திரிகையில்  பரஞ்ஜோய் குகா தாகுர்த்தா “அதானி குழுமத்துக்கு மோடி அரசின் ரூ.500 கோடி பரிசு” என்னும் தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.    அதை “தி ஒயர்” பத்திரிகை ஜூன் 19 அன்று வெளியிட்டிருந்தது.    அதைத் தொடர்ந்து அதானி குழுமம் தாகுர்தாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வற்புறித்தியதன் பேரில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பரஞ்ஜோய் குகா தாகுர்த்தா

அத்துடன் இந்த கட்டுரைக்காக அந்தப் பத்திரிகையின் ஆசிரியரான தாகுர்தா மற்றும் வெளியீட்டாளரான சமீக்‌ஷா டிரஸ்ட் மற்றும் அந்தக் கட்டுரைய மறுமுறை வெளியிட்ட தி ஒயர் ஆகியோரின் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றை  அதானி குழுமம் வழக்கு தொடர்ந்தது.   சுமார் ஆறு மாதங்களாக அந்த வழக்கு நடந்து வந்தது   அத்துடன் அதன் பிறகு அந்த வழக்கில் ‘தி ஒயர்’ பத்திரிகையும் அதானி குழுமத்தால் சேர்க்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி குஜராத் நீதிமன்றம் இந்த மானநஷ்ட வழக்கை தள்ளுபடி செய்தது.   அத்துடன் அந்த பதிப்பாளரிடம் அந்தக் கட்டுரையில் உள்ள சில வாக்கியங்களை நீக்கச் சொல்லியது.     அதை ஏற்ற அந்தப் பத்திரிகை அந்த வார்த்தைகளை நீக்கியது.

நீதி மன்ற ஆணையை தொடர்ந்து.  தாங்களும் அந்த வார்த்தைகளை நீக்கி விடுவதாக ‘தி ஒயர்’  பத்திரிகையும் அறிவித்தது.    அதைத் தொடர்ந்து இந்த வழக்கையும் நீதி மன்றம் நிராகரித்துள்ளது.