டில்லி,

மோடி அரசு அறிமுகப்படுத்திய பல புதிய சட்ட திருத்தங்களில் திவால் சட்டமும் ஒன்று. இந்த சட்டத்தின் பயனாக ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய திவால் சட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிது. இதற்கு 2016ம் ஆண்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி, கடன்கள் வாங்கிய நிறுவனங்கள் ஒன்று கடனை திரும்பி செலுத்த வேண்டும் அல்லது நிறுவனத்தை மூடி விட வேண்டும் என்றும், அதற்கான கால வரம் 6 மாதம் (180 நாட்கள்) என்றும், தேவைப்பட்டால் மேலும் 90 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் ஷரத்துக்களின் படியே, வாராக்கடன்கள் அனைத்தும் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சட்டத்தின்படி முதல் கட்டமாக ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் தொகை பெற்று திரும்பாத நிறுவனங்கள் கணக்கெடுக்கப்பட்டன.

வாராக்கடன் பிரிவில் சேர்ந்துள்ள நிறுவனங்களில் 60 சதவீதம் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவை 12 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் முதலிடத்தில் இருந்தது  அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்தான். இந்த குழுமம் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 1.25 லட்சம் கோடி என கூறப்படுகிறது.

இந்த சட்டத்தில் உள்ள கடுமையான ஷரத்துக்களின் படியே, தற்போது ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள் வாங்கிய கடனை அவசர அவசரமாக திரும்பி செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதன்படியே முதல்கட்டமாக அனில்அம்பானி தனது ஆர்.காம் நிறுவனத்தை தனது அண்ணனான முகேஷ் அம்பானியிடம் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிடைக்க உள்ள ரூ.40ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி, கடனின் ஒரு பகுதியை அடைக்க முயற்சித்து வருகிறார்.

அம்பானியாவது கடனை திரும்பி செலுத்துவதாவது என அனைவரும் வாயை பிளந்த நேரம் உண்டு. ஆனால், பிரபல பிராந்தி தொழிலதிபர் விஜய்மல்லையா கடனை செலுத்தாமல் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துகொண்டு, தாய்நாட்டை கிண்டலடித்து வரும் நிலையில், அம்பானி குரூப் தனது கடனை அடைக்க முன் வந்திருப்பது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இதற்கெல்லாம் மூல காரணம் கடந்த 2016ம் ஆண்டுமுதல் அமலுக்கு வந்த  Insolvency & Bankrupty code எனப்படும் திவால் சட்டம்தான்.

இந்த சட்டப்படி ஒரு  நிறுவனம் தான்  வாங்கிய கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை என்றார், அதை வாராக்கடன் என்று RBI (ரிசர்வ் வங்கி) முடிவு செய்தால் அந்த நிறுவனத்தை முழுமையாக கையகப் படுத்தவோ விற்கவோ வங்கிகளுக்கு உரிமை உண்டு.

 

இந்த சட்டப்படிதான், பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கிய பெரும் முதலைகள், தங்களது  நிறுவனம் கையை விட்டு போய்விடுவோமோ என்ற பயத்தில் தங்கள் சொத்துக்களை விற்றாவது ஒரு பகுதி கடனை திரும்ப செலுத்த முன் வந்துள்ளனர்.

இதேபோல் 40,000 கோடி கடன் வைத்துள்ள ஜேபி அசோசியேட்ஸ் என்ற  நிறுவனமும் தனது  கடனை அடைக்கும் வேலைகளில் சுறுசுறுப்பை காட்டி வருகிறது. இதுபோல மேலும் பல நிறுவனங்களும் தங்களது கடனை அடைக்க, தாங்கள் பினாமி பெயர்களில் வாங்கி குவித்த சொத்துக்களை விற்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திவால் சட்டம் என்றால் என்ன – விளக்கம்

மோடி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய மசோதாக்களில்  மிகவும் முக்கியமானது திவால் மசோதாவாகும். Insolvency and Bankruptcy Code (IBC) எனப்படும் இந்த மசோதா, கடன் வசூலுக்கு இரண்டு வழிகளைத்தான் காட்டுகிறது.

அதாவது கடன் பெற்ற நிறுவனங்கள் பொருளாதாரச் சூழல் காரணமாக நலிவடைந்துள்ளதா, அதை சீரமைக்க முடியுமா என்று ஆராய வேண்டும். இல்லையெனில் அந்நிறுவனத்தை மூடிவிட்டு அதற்குரிய சொத்துகளை ஏலம் விட்டு கடனை வசூலிக்க வேண்டும்.

இந்த சட்டத்தின்படி, கடன்கள் வாங்கிய நிறுவனங்கள் ஒன்று கடனை திரும்பி செலுத்த வேண்டும் அல்லது நிறுவனத்தை மூடி விட வேண்டும் என்றும், அதற்கான கால வரம் 6 மாதம் (180 நாட்கள்) என்றும், தேவைப்பட்டால் மேலும் 90 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய திவால் சட்டத்தின் படி ஒரு நிறுவனம்  திவால் நிலை ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை வரையறுக்கும் ஷரத்துக்களுடன் கடந்த 2015ம் ஆண்டு  மக்களவையில்  அறிமுகம் செய்யப்பட்டது. பின் மே 5,2016ம் ஆண்டில் இது மக்களவயில் நிறைவேற்றப்பட்டது. பின்னர்  மே28 ,2016 ம் ஆண்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது.

சட்டத்தில்  உள்ள ஷரத்து என்ன?

ஒரு தனியார் நிறுவனமோ அல்லது பங்குதாரர் நிறுவனமோ அல்லது தனி நபரோ தான் வாங்கிய கடனைஅடைக்க இயலாமல் திவால் நிலையில் இருக்கும் போது கடன் வாங்கியவருக்கும் , கொடுத்தவருக்கும் இடையே ஒரு சுமூகமான நிலையை கையாள்வதே இதன் நோக்கம்.

இந்தச் சட்டத்தின் படி கடன்கொடுத்தவரோ அல்லது வங்கியோகடன் வாங்கிய தனிநபரின் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கையை மேற்கொள்ள முறையிடலாம்.

இதே முறையினை கடன் வாங்கியவரும் மேற்கொள்ளலாம் அப்போது இந்தத் தீர்ப்பாயம் தனிநபரின் பொருளாதார பிரச்சினைகளை ஆரய்ந்து முடிவு எடுக்கும். கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கும்.

ஆனால் அந்த காலகட்டத்தில் அந்த நபரின் மீது வழக்கு தொடர இயலாது. இந்த தீர்ப்பாயத்தில் மூன்று முக்கிய நபர்கள் உள்ளனர். அவர்கள்,

திவால் நிபுனர்.
தீர்வு நிபுனர்
திவால் அறங்காவலர்.

ஆறு மாதத்திற்குள்ளாகவும் செலுத்த இயலாத நிலையில் இந்த தீர்ப்பாயம் பின்வரும் செயல்களை மேற்கொள்ளலாம்,

நிறுவனத்தின் பெயரிலோ அல்லது தனிநபரின் பெயரிலோ இருக்ககூடிய நிதியை வேறொருவரின் பெயருக்கு மாற்றம் செய்ய இயலாது.

சொத்துக்களை விற்க இயலாது. பிற கடன்களை வாங்க இயலாது. நிர்வாக அதிகாரம் முழுமையும் தீர்வு நபரிடம் சென்றுவிடும்.

செய்திதாள்களில் அறிவிப்பு வெளியிடும்.

மேற்கண்ட அனைத்து நடைமுறைகளினாலும் பணம் பெறையலாத சூழ்நிலையில் ஐ.பி.பி.ஐ (Insolvency and Bankruptcy Board Of India) கடன்பெற்றவர்களின் சொத்துக்களை விற்று கடனை சரிசெய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.

தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் ஷரத்துக்களின் படியே, வாராக்கடன்கள் அனைத்தும் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பின் குறிப்பு: இந்த செய்தி எந்த வாட்ஸப் forward லும் வராது.. ஏனென்றால் இது நல்ல செய்தி மட்டுமல்ல ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி