_de608664-b219-11e5-894a-943651415dff

மும்பை: ஹிந்தி திரைப்பட உலகத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆளாளுக்கு திடீர் திடீர் என ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்துவிடுவார்கள். இது அவர்களை அறியாது மீடியாக்களின் செய்தி பசிக்கு இரையாகிவிடும். இந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அதில் ரன்பீர்-தீபிகா, ரன்வீர்-தீபிகா, ஆலியா-சித்தார்த், ஃபாவோத்-சோனம் ஆகிய ஜோடிகளில் எது சிறந்த ஜோடி என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஷாருக்கான் இவர்களை விட்டுவிட்டு, அமிதாப் பேத்தியும், எனது மகனும் தான் சிறந்த ஜோடி என்று தடாலடியாக பதிலளித்து அனைவரையும் கிரங்கடித்துவிட்டார்.
ஆம்.. அமிதாப் பேத்தியும், ஐஸ்வர்யாராய் மகளுமான ஆராத்யாவும், ஷாருக்கான் மகனுமான ஆப்ராம் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இவர்கள் தான் பாலிவுட்டை எதிர்காலத்தில்  கலக்கபோகும் ஜோடி என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஆனால் ‘தில்வாலே’ பட நாயகி கஜோல் இதை ஏற்க மறுத்துள்ளார். ‘ஆராத்யாவை விட ஆப்ராம் இளையவன்’ என்று தெரிவித்துள்ளார். ‘காதலுக்கு வயது கிடையாது’ என்று ஷாருக்கான் பதிலடி கொடுத்தார்.
ஷாருக்கானின் இந்த கருத்து குறித்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமிதாபச்சனிடம் கேட்டனர். இதற்கு அவர் பதில் கூறுகையில்,‘ இருவரும் சிறந்த நண்பர்களாக உள்ளனர். வளர்ந்த பிறகு இருவரும் ஜோடியாக நடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்
எப்படியோ எதிர்கால பாலிவுட்டுக்கு இப்பவே ஒரு ஜோடி தயாராகிவிட்டது.