ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள யூகலிப்டஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, யூகலிப்டஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவு திடீரென தீ பிடித்து எரிந்து. இதன் காரணமாக தொழிற்சாலையின் முன்பகுதி எரிந்து நாசமானது.
ஆலையின் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள காய்ந்த யூகலிப்டஸ் தைல இலைகளில் பற்றிய தீ, காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்கு அந்த பகுதி மக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் தீ பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீ பிடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், முழுமையா சேத விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.