டில்லி
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளதால் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
நாளை முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 14 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல சூடான விவாதங்கள் நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது/
இன்று இந்தத் தொடர் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சுமித்ரா மகாஜன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.