நாமக்கல்

ட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மூவரை நாமக்கல் அருகே போலீசார் 20கிமீ துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர்.

தற்போது வட மாநில கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் அதிகாரி பெரியபாண்டியை பற்றி பரபரப்பாக பேசப் பட்டு வருகிறது.   கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற பெரியபாண்டி கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.   இந்த செய்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நாமக்கல் அருகே 2 காரில் வந்த கொள்ளையர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர்.  அவர்களை சுமார் 20 கிமீ தூரம் விரட்டிச் சென்று போலீசார் பிடித்துள்ளனர்.   காரில் இருவர் மட்டுமே இருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பிறகு மற்றவர்களை போலீசார் தேடும் போது மேற்கு பாலப் பட்டி என்னும் இடத்தில் ஒரு வீட்டின் மேற்கூரையில் ஒரு கொள்ளையன் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்த போலீசார் அவனையும் கைது செய்தனர்.   இன்னும் 2 பேர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.   அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.