டில்லி:
கும்பமேளாவுக்கு யுனெஸ்கோவின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.
அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் நகர நதிக்கரையில் கும்பமேளா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு புனித நீராடுவது வழக்கம்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் கும்பமேளாவுக்கு சர்வதேச கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அங்கிகாரம் வழங்கி கவுரவித்துள்ளது. மனித இனத்தில் பாரம்பரிய கலாசார விழாவாக கும்பமேளாவை, யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய கலாசார அமைச்சர் மகேஷ் சர்மா, கூறுகையில், ‘‘கும்பமேளாவுக்கு யுனெஸ்கோ அங்கிகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.