மும்பை:

கைது செய்யப்பட்ட தஷ்வந்த் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த் (வயது 23) என்பவர் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷவ்ந்த் தாய் சரளா கடந்த சில தினங்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.

நகைக்காக தாயை தஷ்வந்த் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு தஷ்வந்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

தஷ்வந்துக்கு குதிரை பந்தயத்தின் மீது அதிக ஆர்வம். இதனால் அவர் மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு அவரை நேற்று கைது செய்தனர்.

சென்னைக்கு அவரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கை விலங்கு போடப்பட்ட நிலையில் கழிப்பிடம் சென்ற தஷ்வந்த போலீசார் கண்களில் மண்னை தூவிவிட்டு தப்பிச் சென்றார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]