வாஷிங்டன்,

ஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போதுவரை ஜெருசலமே இருந்து வருகிறது. ஆனால், அதை அதிகாரப்பூர்வமாக ஐநா அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இஸ்ரேல் பல்வேறு பிரச்சினை களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெளியிட்டு உள்ளார்.

மேலும் இஸ்ரேலின் ‘டெல் அவிவ்’ என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் டிரம்பை எச்சரித்துள்ளனர். சவுதி அரேபியாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.