சென்னை:
ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் நடிகர் விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார்.

தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். தன்னை முன் மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறி விஷால் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தும் ஏற்கப்படவில்லை.
இதை தொடர்ந்து விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
Patrikai.com official YouTube Channel