சியோல்:
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 3 நாள் சுற்றுப் பயணமாக கொரியா குடியரசு நாட்டுக்கு இன்று சென்றுள்ளார். அந்நாட்டு இரண்டாவது முதலீடு தளமாக ஆந்திராவை தேர்வு செய்யவும், அதிக அளவில் முதலீடுகளை ஆந்திராவுக்கு ஈர்க்கும் வகையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அங்கு அவர் கொரியா தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஆந்திராவில் உற்பத்தி தொழிற்சாலைகளை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள், உதவிகள் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். ஆந்திராவில் உள்ள வசதிகள், உள்கட்டமைப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
ஆட்டோமொபைல்ஸ், மின்சாரம், டெக்ஸ்டைல்ஸ், உணவு பதப்படுத்துதல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் கொரியாவின் முதலீடுகளை ஈர்க்க அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், அவர் வரும் பிப்ரவரி மாதம் விசாகப்பட்டிணத்தில் நடக்கும் கூட்டாண்மை கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள கெ £ரியா தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஏற்கனவே 37 கொரியன் தொழிற்சாலைகள் ஆந்திராவில் 3 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்ப ந்தம் செய்துள்ளன. கியா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பு நிறுவனங்கள் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 995 கோடி முதலீட்டில் 7 ஆயிரத்து 171 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உத்தராவதம் அளித்திருப்பதாக ச ந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் கொரியன் டவுன்ஷிப் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், ஜூசங் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் சோலாள் மின் சக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஆந்திராவில் நிறுவ வேண்டும் என்று அந்நிறுவன சிஇஓ ஹ்வாங் சுல் ஜூ.விடம் நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிறுவனம் நாடு முழுவதும் சோலார் மின் நிலையங்களை அமைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வருடன் நிதியமைச்சர் யானமாலா ராமகிருஷ்ணுடு, தொழிற்சாலைகள் அமைச்சர் அமர்நாத் ரெட்டி, மூத்த அதிகாரிகள் ஆகியோர் கொரியா கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டுள்ளனர்.