சென்னை,

ற்கொலையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவிலும் புளுவேல்விளையாட்டுக்கு பலர் பலியான நிலையில், மத்திய மாநில அரசுகள் எடுத்த விழிப்புணர்வு காரணமாக கொஞ்ச காலம் இந்த விளையாட்டு விளையாடப்படாமல், அதுகுறித்த எந்தவித தகவல்களும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில், சென்னை பல்லாவரம் அருகே புளூவேல் விளையாடிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம், தமிழகத்தில் மீண்டும் புளுவேல் விளையாட்டு தலை தூக்கு கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அருகே உள்ள பொழிசலூர் பகுதியை சேர்ந்த 21வயது இளைஞரான பிரசாத், புளுவேல் விளையாட்டுக்கு அடிமையான, அதில் கொடுக்கப்படும் கட்டளையின்படி  கையில் பிளேடால் அறுத்த நிலையில், அதைப்பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிரசாத தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கவே கடந்த அக்டோபர் மாதம் பொன்னேரி அருகே புளூவேல் விளையாடியதால் இளைஞர் தினேஷ் என்பவர்  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது பல்லாவரம் இளைஞர் .  பிரசாத் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.