தனது முதல் படமான ‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன்.தற்போது தனது அடுத்த படமான ‘அதையும் தாண்டி புனிதமானது’ என்கிற படத்திற்கு பூஜை போட்டுள்ளார் வெங்கட்ரமணன்..
கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது..
இயக்குனர் வெங்கட் ரமணன்.. இசையமைப்பாளர் வி.கே.கண்ணன், ஒளிப்பதிவாளர் செல்வம், படத்தொகுப்பாளர் ராஜேஷ் கண்ணன் என முதல் பட கூட்டணியே இதிலும் தொடர்கின்றனர். இந்தப்படத்தில் என்ன சிறப்பம்சம் என்றால் சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.
படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.