கன்னியாகுமரி:

கி புயலில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓபிஎஸ் உள்பட 3 அமைச்சர்கள் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

புயல் அறிவிப்பு குறித்து, சரியான தகவல் கொடுக்காததால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில், புயலின் தாக்கம் காரணமாக கடல் கொந்தளித்த நிலையில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிய நிலை இன்றுவரை உள்ளது.

இந்திய கடற்படையினர், மற்றும் கடலோர காவல்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், கடலில் தத்தளித்து வந்த மீனவர்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், மீட்பு பணிகள் தொடர்வதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமாரி பகுதிக்கு சென்றார்.  அங்கு புயலின் கோர தாண்டவத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட  நீரோடியில் மீனவர் குடும்பத்தினரை   சந்தித்து பேசினார்.

அங்கு  மாயமான மீனவர்கள் உறவினர்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.  மேலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு பார்வையிட்டு வரும், அங்கு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களை சந்தித்து அவர்களுக்க  நிவாரண உதவிகளும் செய்து வருகிறார்.

குமரியில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் உறவி னர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.