
சென்னை:
மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் அண்ணன் மகன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
மறைந்த முதல்வர் எம் ஜி ராமச்சந்திரனின் அண்ணன் சக்ரபாணி. இவரது மகன் எம்.சி. சந்திரசேகர். இவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், இன்று மதியம் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
“தமிழக மக்களின் இதய தெய்வமாக விளங்குபவர் எம்.ஜி.ஆர். அவரது ரத்த வாரிசு நான். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை செயல்படுத்த, மக்களுக்காக உழைக்க ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியுடுகிறேன். மக்கள் என்னை நிச்சயமாக வெற்றி பெற வைப்பார்கள்” என்று சந்திரசேகர் தெரித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel