சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதியில், வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த , நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது.
வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாள். ஆகவே, இன்று நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
மேலும், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜனும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.
நடிகர் அமீரும் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சுயேட்சையாக போட்டியிடப்போகிறாரா அல்லது நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை.
இந்தத் தொகுதியில் ஏற்கனவே, தி.மு.க சார்பில் மருது கணேஷூம் அ.தி.மு.க சார்பில் மதுசூதனனும், டி.டி.வி.தினகரன் சுயேச்சையாகவும் களமிறங்கி உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஷாலும் களமிறங்க உள்ளார்.
வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.