சென்னை:
நடிகர் விஜயின் தந்தையுடன் நடிகர் விஷால் சந்தித்து பேசினார்.
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். அதற்காக நாளை அவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் கோட்டூர்புரத்தில் உள்ள நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரை விஷால் இன்று சந்தித்து பேசியுள்ளார். விஷாலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் அரசியல பிரவேசம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் விஷால் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார்.