
சென்னை
ஆர் கே நகர் தேர்தலில் மதிமுக தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதற்காக அறிவித்ததற்கு மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று மதிமுக தனது ஆதரவை ஆர் கே நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு வழங்கப் போவதாக வைகோ அறிவித்தார். இதற்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு க ஸ்டாலின், “திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள வைகோ வுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மதிமுகவின் இந்த நிலைப்பாட்டை நான் பெரிதும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசிடம் அடகு வைத்து வரும் அதிமுகவின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்காக அனைத்துக் கட்சிகளும் திமுகவுடன் கை கோர்க்க வேண்டும். தற்போது இந்த ஆதரவை ஏற்றுக் கொள்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அப்போது யோசிப்போம்” எனக் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]