“நானும் ரௌடி தான்” படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாராவும் விஜய் சேதுபதியும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா அகியோரின் நடிப்பில் உருவாகி வரும் படம் “இமைக்கா நொடிகள்”. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அதர்வாவின் அக்காவாக நயன்தாரா நடித்து வருகிறார்.
நயன்தாராவின் கணவராக ஒரு முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படக் குழுவினர் விஜய் சேதுபதி பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எனவும் அவரைக் காண தாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் புகழ்மாலை சூட்டி உள்ளனர்.