ஸ்லாமாபாத்:

பாக்  பயங்கர வாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையத் 2018-ம் ஆண்டு நடைபெறும் பாக்.பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் கூறுகியுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத.   இவர் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற கொடூர மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்.   பாகிஸ்தான் அரசு அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. கடந்த நவம்பரில் நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது.  இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை ஒட்டி இவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹஃபீஸ் சையத் எம்.எம்.எல். என்னும் ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்.  இந்தக் கட்சி சார்பில் வரும் 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட ஹஃபீஸ் சையத் திட்டமிட்டுள்ளதாகவும் தாம் போட்டியிடும் தொகுதி குறித்து இனி முடிவு செய்யவார் எனவும் விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.