டில்லி
தங்களை இந்தியர்களாக அறிவித்துக்கொண்ட இஸ்லாமியர்களை இந்தியா பராமரிக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் கூறி உள்ளார்.
பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக 2009 முதல் 2017 வரை பதவி வகித்தவர் ஆவார். இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில ஊடகம் நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் அந்த கருத்தரங்கில் உரை நிகழ்த்தி உள்ளார்.
அவர் தனது உரையில், “நான் எனது பதவிக்காலத்தில் இருமுறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். இந்தியா இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து வாழும் நாடு என்பதை அப்போதே நான் கண்டுள்ளேன். இங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களை இந்தியர்கள் எனத் தான் உணருகிறார்கள். மற்ற நாடுகளில் இது போல கிடையது.
அவ்வாறு தங்களை இந்தியர்களாக அறிவித்துக் கொண்ட இஸ்லாமியர்களை இந்தியா பராமரிக்க நான் கேட்டுக் கொள்கிறேன். இதை எப்போதும் நடைமுறைப் படுத்தவும் நான் வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.