சென்னை,
தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் கடுமையான பேரிழப்பை சந்தித்துள்ளது. புயல் வெள்ளம் காரணமாக ஏராளமான பொதுமக்களும் இறந்து போயுள்ளதாகவும், ஆனால், அதை வெளியே தெரியாமல் அரசு மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும், மத்திய மாநில அரசின் புயல் குறித்த சரியான அறிவிப்பு இல்லாத காரணத்தால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்களின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை தெரிய வில்லை.
புயல் பாதிப்பில் இருந்து குமரி மாவட்ட மக்களையும், மீனவர்களையும் மீட்பதில் தமிழக அரசு சுணங்கி செயலாற்றி வருகிறது. ஆனால் கேரளாவோ அதிரடி நடவடிக்கையில் இறங்கி, கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் ஓகி புயலில் சிக்கி கடலில் தத்தளித்த அம்மாநில மீனவர்களை மீட்டு வந்துள்ளது.
ஆனால், தமிழக அரசும் சரி, கடலோர காவல்படையும் நடவடிக்கையில் இறங்காமல் காலம் தாழ்த்து வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கடற்கரையோரம், அவ்வப்போது, சுனாமி ஒத்திகை, பாதுகாப்பு ஒத்திகை என்று கடலோர பகுதிகளில் சைரன் சத்தம் ஒலிக்க ஆம்புலன்ஸ் வருவதும், மயங்கி விழுந்த வரை காப்பாத்தி ஆம்புலன்சில் ஏத்தி அனுப்புவதும், பொதுமக்கள் என்ன ஏது என்று விசாரிக்கும்போது, நாங்கள் ஒத்திகை நடத்தினோம் என்று ஊடகங்கள் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டி வருகின்றனர்.
ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன? தற்போது குமரி மாவட்டத்தில் என்ன நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டமே சின்னாபின்னமாகி, எங்கு நோக்கினும் மரங்கள் வேரோடு சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
ஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்படாததால், வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததால், ஏராளமான கால்நடைகள் பலியாகியும், பொதுமக்களும் ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வும், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்கள் வீட்டையும், ஊரையும் விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வரும் செய்திகளும் ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துகொண்டிருக்கின் றன.
கடந்த 3 நாட்களாக சொல்லோனா துயரில் வாடி வரும் குமரி மாவட்ட மக்களுக்கு என்ன உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. புயலின் கோரத்தால் உருக்குலைந்த பகுதிகளில் அரசின் நிவாரணம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அரசு அதிகாரிகளோ எங்கே தாங்களும் வெள்ளத்தில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சி, அலுவல கத்தில் இருந்தே ஆலோசனை கொடுத்து வருகிறார்கள். மரங்களை அப்புறப்படுத்த எத்தனையோ புதுவகையான இயந்திரங்கள் வந்துள்ள நிலையில், இன்னும் அரிவாளைக்கொண்டு வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள்.
குமரி மேற்கு மாவட்டத்தில் சாலையில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்த அதிகாரிகளை அழைத்தும், அவர்கள் செவிமடுக்காததால், அப்பகுதி மக்களே முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றி பாதையை ஏற்படுத்தினார்.
ஆனால் அவ்வப்போது ஒத்திகை நடத்தி வரும் எந்தவொரு பேரிடர் தரப்பினரும், உண்மை யிலேயே பேரிடருக்கு ஆளாகி இருக்கும் குமரி மாவட்டத்தை புறக்கணிப்பது வேதனையான விஷயம்.
அதுபோல கடலுக்கு சென்ற மீனவர்களை காப்பாற்ற எந்தவொரு முயற்சியும் தமிழக அரசும், இந்திய கடலோர காவல்படையும் எடுக்கவில்லை. அந்த மீனவர்கள் என்ன ஆனார்கள். புயல் காற்றினால் திசை மாறி சென்றனரா? என்ற விவரமும் தெரியவில்லை.
ஆனால், கேரள அரசோ, புயல் குறித்து மத்திய அரசு சரியான தகவல்கள் தரவில்லை என்று கூறி, முரல் பிரனாயி விஜயன், தனது மாநில அரசு சார்பாக கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்க அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கடலில் மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பாததால், அவர்களை காணவில்லை என கேரள அரசு மிக துரிதமாக பேரிடர் அவசர நிலை பிரகடனம் செய்தது.
அதையடுத்து, விமானப்படை விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை மூலம் தேடுதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை மீட்டிருக்கிறார்கள். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், குமரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மூன்று நாளாகியும் இன்னும் கரை திரும்பவில்லை.
இந்த நிமிடம் வரை அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படையோ, கடற்படையோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.
புயலில் சிக்கி, உயிர்பிழைத்து வந்த ஒருசில மீனவர்கள், பல மீனவர்கள் புயல் காரணமாக கடலிலேயே இறந்துவிட்டனர் என்று கூறி உள்ளார்கள்.
குமரி மாவட்டம், தூத்தூர் , சின்னதுறை போன்ற பகுதிகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. மீனவர்களை மீட்க கோரி அரசிடம் மீனவர்கள் குடும்பத்தினர் கூறி வருகிறார்கள்.
ஆனால், தமிழக அரசோ அதை செவிமடுக்காமல், மீனவர்களின் அடையாளங்கள் சேகரித்து வருவதாகவும், தமிழகத்தில் தினசரி ஊடகங்களில் தலைகாட்டும் மீன்வளத்துறை அமைச்சர், தற்போது மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, அவர்களை மீட்பது குறித்தோ எந்தவித நடடிவக்கையும் எடுக்காமல், ஆர்.கே.நகர் தேர்தலிலேயே கவனமாக இருந்து வருகிறார்.
அரசு மற்றும் அமைச்சரின் இந்த கண்டுகொள்ளாத நிலை குமரி மாவட்ட மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடி வில்லை என்பதால் அம்மக்களை பழிவாங்குகிறதா என் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இனி இந்த பேரிடர் ஒத்திகை பார்ப்பு நாடகம் நடத்தாமல் இருப்பது நல்லது அரசுக்கும் பொது மக்களுக்கும் நல்லது என்று பதிவிட்டு வருகிறார்கள்.