சென்னை:

ந்தமான் அருகே உருவான புதிய காற்றதழுத்த தாழ்வு பகுதி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை மத்திய நீர் வளத்துறையும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.

கடந்த 3 நாட்களாக தென்தமிழகத்தை மிரட்டிய ஓகி புயல் தற்போது லட்சத்தீவை துவம்சம் செய்து வருகிறது.

இந்நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த  காற்றதழுத்த தாழ்வு மண்டலம் நகர்வின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளது.

இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக சென்னையில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும் என மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஒகி புயலால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒகி புயலின் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழு மண்டலம் கரையைக் கடக்கும் வரையில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.