டில்லி

ரு ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் 100 ஆண்டாகிறது.

அப்போதைய பிரிட்டிஷ் அரசால் கடந்த 1917ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அன்று ஒரு ரூபாய் நோட்டு முதன் முதலாக அறிமுக்மப் படுத்தப்பட்டது.  வெள்ளியால் ஆன ஒரு ரூபாய் நாணயங்களே அதற்கு முன் புழக்கத்தில் இருந்தன.  முதலாவது உலகப் போர் சமயத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.  அதனால் ஒரு ரூபாய் நாணயம் அச்சிடமுடியவில்லை.

அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தின் படத்தையும், மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் உருவத்தையும் கொண்ட ஒரு ரூபாய் நோட்டை வெளியிட்டது.  அதற்குப் பின் இந்த ஒரு ரூபாய் நோட்டு பல மாறுதல்களை கண்டுள்ளது.

மற்ற நோட்டுக்களுக்கும் ஒரு ரூபாய் நோட்டுக்கும் உள்ள வித்தியாசம் இந்த் நோட்டு ரிசர்வ் வங்கி வெளியிடுவது கிடையாது.  இதை மத்திய அரசு வெளியிடுகிறது.  ஒரு ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையொப்பம் இருக்காது.   மத்திய நிதித்துறை செயலாளரின் கையொப்பம் மட்டுமே காணப்படும்.

ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைந்ததற்கு எந்த ஒரு கொண்டாட்டமும் நடத்தப்படவில்லை.