லண்டன்:

சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு ஹபீஸ்சயீத் ஐ.நா.வில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாகிஸ்தான் ஜமா -உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ்சயீத். இவர் தடை செய்யப்பட்ட லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலு க்கு மூளையாக செயல்பட்டவர். இவரை சர்வதேச குற்றவாளி என அறிவித்து இவரது தலைக்கு ரூ.6.50 கோடி பரிசு தொகையை அமெரிக்கா அறிவித்தது. எனினும் அவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டார். சயீத்தை கைது செய்ய டிரம்ப் கடும் நெருக்கடி கொடுத்தார்.

இதை தொடர்ந்து ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சமீபத்தில் லாகூர் கோர்ட் மூலம் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சர்வதேச தீவிரவாத பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என சயீத் ஐ.நா.வில் மனு தாக்கல் செய்து செய்து உள்ளார்.