பம்பா,

ந்தளம் ராணி மறைவை தொடர்ந்து சபரி மலை அய்யப்பன் கோவில் மூடப்படுவதாக வந்த செய்தி தவறானது என்று தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

பந்தளத்தில் உள்ள ச்ரம்பிக்கல் அரண்மனையில் வசித்து வந்த 94 வயதான ராணி அம்பா தம்புராட்டி கடந்த  சனிக்கிழமை நள்ளிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் பந்தளம் அரண்மனையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

இதன் காரணமாக  டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிலர் தவறுதலாக நினைத்து  அய்யப்பன் கோவில் மூடப்படுவதாக அறிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து சபரிமலை தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  பந்தள மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அம்பா தம்புராட்டி, 94 வயோதிகத்தால்  காலமானார். இதனால் பந்தளத்தில் நடைபெறும் திருவாபரண தரிசனம் மட்டும் டிசம்பர் 6 வரை நிறுத்தப்பட்டு உள்ளது.

சபரிமலை வழிபாடுகளிலோ, நடை திறப்பிலோ, தரிசன நேரங்களிலோ எந்த மாற்றமும் இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.