சண்டிகர்:

பகவத் கீதை படித்தால் மன குழப்பங்கள் நீங்கும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.

ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற சர்வதேச ‛கீதா மஹோர்சவ்’ நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஹரியானா மாநிலம் குருஷேத்திராவில் நடைபெற்ற சர்வதேச ‛கீதா மஹோர்சவ்’ நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது இளைஞர்கள் பாதுகாப்பின்மை, டென்ஷன், குழப்பம் என்று அவதியுறுகிறார்கள். இவற்றிலிருந்து விடுபட அவர்கள் கீதை படிக்க வேண்டும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, கல்பனா சாவ்லா, உலக அழகி மானுஷி சில்லார், ஆகியோர் ஹரியான மாநிலத்தில் இருந்து வந்து உலக அளவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். இதற்கு அவர்கள் கீதையை பின்பற்றியதே காரணமாக இருக்கலாம்.

நாம் ஒவ்வொரு நாளும் கீதையை கொண்டாட வேண்டும். அது நீதி, ஆன்மீகம், கலாச்சாரம், மறுமலர்ச்சி ஆகியவற்றை நமக்குள் விதைக்கும்” என்று அவர் பேசினார்.