மும்பை,

த்மாவதி திரைப்பட வெளியிட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதை தொடர்ந்து, தனி நபர் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம் செய்து எதிர்ப்பை பதிவு செய்ய   இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. (Indian Films and TV Directors’ Association – IFTDA)

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற இந்திப் படத்தில்  பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது.

ராஜ்புத் கர்ணி சேனா என்ற அமைப்பு படத்தை வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து வருகிறது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர்களை மிரட்டி வருகிறது.

சென்சார் போர்ட் தலைவர் பிரசூன் ஜோஷி இந்த திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கும் முன் சில தலைவர்களுக்கு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அது மட்டு மின்றி சில ஆவணங்கள் இல்லை எனக் கூறி இந்த படத்துக்கு சான்றிதழ் கேட்டு கொடுத்த மனுவும் திருப்பி அளிக்கப்பட்டது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களான ம.பி, குஜராத்தில் படத்தை வெளியிடவும் மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

ந்நிலையில், படம் வெளியிட வற்புறுத்தி, ஆதரவு தெரிவித்தும், மிரட்டல் விடுப்பவர்களை எதிர்த்தும்,  இந்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA)  மற்றும் திரையுகை சேர்ந்த 20 துணை அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

இதுகுறித்து  ஐஎப்டிடிஏ அமைப்பை சேர்ந்த அசோகே பண்டிட் கூறியதாவது,

” தனிநபர்களின் வெளிப்பாடு சுதந்திரம் பாதுகாக்க ” வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்த இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும், “சஞ்சய் ஒரு பொறுப்பான திரைப்பட தயாரிப்பாளராவார். வரலாறு குறித்து ஒரு படம் தயாரிப்பது என்பது எளிதான காரியமல்ல. அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. இந்த நேரத்தில்நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அவருக்கு தோள் கோடுக்க வேண்டும். எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) அனைத்து படப்பிடிப்பு தளங்களிலும் விளக்குகளை அணைத்து, படப்பிடிப்பை நிறுத்தி தங்களது  எதிர்ப்புகளை பதிவு செய்ய வேண்டும்.

நாட்டில் தற்போது  ஒவ்வொரு அமைப்பும், திரைப்படங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், அச்சுறுத்தல் செய்தும் தயாரிப்பாளர்களுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் செயல்களை ஒரு ஜனநாயக முறையில் நாங்கள் கண்டிக்கிறோம். பத்மாவதி படத்திற்கு நீதி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் திரைப்படத்தை இலக்காக கொண்டு ஒருசிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.  வெளிப்படையான கருத்துக்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள், இதன் காரணமாக சினிமாத் தொழிலாளர்கள் பெரும்  துயரத்தை அனுபவிக்கி றார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக எங்களுக்கு எந்த ஒரு தொழிற்துறையிலிருந்தும் ஆதரவு தரப்படுவதில்லை.

நாங்கள் ஜனநாயகத்தில் வாழ்கிறோம், அரசாங்கத்திலும் அதன் நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.  படத்தை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள்  இந்த படத்தை இதுவரை பார்க்க வில்லை.

இவ்வாறு பண்டிட் கூறினார்.

படம் திரையுட வலியுறுத்தி,  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் நுட்ப உறுப்பினர்கள் நவம்பர் 26ம் தேதி, பிற்பகல் 3.30 மணி அளவில்  ஆசான் ஹுன் பிலிம் சிட்டி  பிரதான நுழைவாயிலில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.