நகர்ஹர்கா
பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான் நகர்ஹர்கா கோட்டையில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
பத்மாவதி திரைப்படம் நாளுக்கு நாளுக்கு நாள் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. ராணி பத்மினியை கேவலப் படுத்தும் விதமாக படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் நடித்த தீபிகா, இயக்குனர் ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் நகர்ஹர்கா கோட்டையில் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவர் யாரென இன்னும் அடையாளம் காணப் படவில்லை. அவர் அருகில் “பத்மாவதி திரைப்படத்தை கடுமையாக எதிர்க்கிறோம். நாங்கள் உருவ பொம்மையை எரிப்பவர்கள் அல்ல. கொலையே செய்து விடுவோம்” என்னும் வாசகங்கள் காணப்பட்டன.
இதனால் பத்மாவதி திரைப்படம் வெளி வருவதில் மேலும் சிக்கல் உண்டாகி இருப்பதாக படக் குழுவினர் தரப்பில் கூறப் படுகிறது.