‘
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தானே மீண்டும் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இதன் காரணமாக டிடிவி தினகரன் தரப்பினர் அதிமுக, இரட்டை இலை, அதிமுக கொடி போன்றவற்றை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தற்போது தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன், இன்று, திருப்பூர் பெருமாநல்லூரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தானே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறினார்.
இதையே, அவரது அணியின் அவைத்தலைவரான அன்பழகனும் உறுதி செய்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய டிடிவி, , ‘இரட்டை இலையை மீட்க இரட்டை இலையை எதிர்த்தே போட்டியிட வேண்டியுள்ளது என்றார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட கட்சி நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ள தாகவும், தன்னை தேர்வு செய்த ஆட்சி மன்ற குழு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இரட்டையை இலையை சட்டப்படி நீதிமன்றம் மூலம் மீட்டெடுப்போம் என்றும் கூறினார்.