சிர்ஹிந்த், பஞ்சாப்

ஃப்கானிஸ்தான் தூதர் பஞ்சாபில் உள்ள தனது முன்னோர்களின் சமாதியை பார்வை இட்டார்.

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தூதர் ஷைதா முகமது அப்தாலி.  இவர் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பல இடங்களுக்கு வருகை தந்தார்.  அப்போது ஆஃப்கானிஸ்தான் மன்னர் ஜமன் ஷா துரானி அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியை பார்த்தார்.  பதினெட்டாம் நூற்றாண்டில் மரணம் அடைந்த ஆஃப்கான் மன்னரின் உடல் பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்த் என்னும் இடத்தில் உள்ள தர்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.  அந்த இடத்தில் ஒரு நினைவுத் தூணும் உள்ளது.

ஆஃப்கான் தூதர் ஷைதா, ”எனது முன்னோர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கண்டதும் நான் எனது சொந்த வீட்டுக்கு வந்ததாக உணர்ந்தேன்.  ஆஃப்கானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.  ஆனால் இந்த இடம் சுத்தமாக பராமரிக்கப் படவில்லை.  குறிப்பாக நினைவுத் தூண் சுவர் முழுவதும் பல கிறுக்கல்கள் காணப்படுகின்றன.  தரை முழுவதும் பறவைகளின் எச்சங்கள் உள்ளன.  எங்கள் அன்புக்குறிய மன்னரின் நினைவுத்தூண் இவ்வாறு உள்ளது கவலையை அளிக்கிறது.  இந்த நினைவுத் தூண் ஆஃப்கான் அரசுக்கு சொந்தமானது.  எனவே நான் இந்த தூணை மீண்டும் அமைக்க அரசிடம் விரைவில் பேச உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.