டில்லி:
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் சமுதாய தொண்டு பணிகளுக்கு குழும சொத்துக்களில் இருந்து 10 சதவீதத்தை ஒதுக்க உறுதியளித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்ப்டடுள்ளது.
பாரதி அறக்கட்டளை பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மனிதாபிமான பணிகளுக்கு தொழில் ரீதியான அமைப்புகளை ஏற்படுத்தி பாரதி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இதை மேலும் வலிமையாக்கும் வகையில் புதுமையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவின் நலிவடைந்த மக்களுக்கு உதவ அறக்கட்டளைக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஒரு செய்திகுறிப்பில் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார்.