பாட்னா

பீகார் முதல்வர் கிராமத்தில் திறந்த வெளியில் காலைக்கடன் கழிப்பதை அம்மாநில ஆசிரியர்கள் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் எனக் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சமீபத்தில் அனத்து ஆசிரியர்களும் கிராமங்களுக்கு, காலை அல்லது மாலையில் சென்று அங்கு திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் மக்களை புகைப்படம் எடுத்து அனுப்பக் கோரி இருந்தார்.   வரும் டிசம்பர் 27ஆம் தேதி வரை காலையில் ஐந்து மணி முதலும் மாலையில் 4 மணி வரையிலும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு ஆசிரியர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகார் ஆசிரியர் சங்க செயலாளரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் பிரசாத் சிங் இதை வன்மையாக கண்டித்துள்ளார்.  இது குறித்து அவர் முதல்வர் நிஷித் குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.   அந்தக் கடிதத்தில், “ஆசிரியர்களை அவமானப் படுத்தும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.  ஆசிரியர்கள் அறிவை வளர்பவர்கள்.  அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுபவர்கள் அல்லர்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அனைவருக்கும் வீட்டில் கழிப்பறை கட்டியோ அல்லது அனைத்து கிராமங்களிலும் பொதுக் கழிப்பறை கட்டியோ தராத அரசுக்கு இது போல உத்தரவு இடுவது அந்த அரசின் கையாலாகாத தனத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.