டில்லி,
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்தியானந்தாவும், அவரது சிஷ்யையான நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த வீடியோ குறித்து, அறிக்கை கொடுத்துள்ள டில்லி தடய அறிவியல் துறை அந்த வீடியோ உண்மையானதுதான் என்று கூறி உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதை போன்ற வீடியோ காட்சிகள் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ, நித்தியானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் வெளியிட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சாமியார் தரப்பபில் இருந்து இந்த வீடியோ போலியாது என்றும், தொழில்நுட்ப முறையில் சித்தரிக்கப்பட்டவை என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நித்தியானந்தா சார்பில் அவரது மட நிர்வாகி வழக்கை தாக்கல் செய்தார். மேலும், இந்த வீடியோவை காட்டி தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நித்தியானந்தா, ரஞ்சிதா உல்லாசமாக இருந்த வீடியோவின் உண்மை தரம் குறித்து ஆய்வு செய்ய டில்லியில் உள்ள மத்திய தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வீடியோவை ஆய்வு செய்த டெல்லி தடய அறிவியல் ஆய்வகம், நடிகையுடன் நித்யானந்தா இருக்கும் வீடியோ உண்மைதான் என்று சான்றளித்துள்ளது.
இதன் காரணமாக நித்தியானந்தாவுக்கு சிக்கல் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது.
அந்த வீடியோ:
https://www.youtube.com/watch?v=6dD–oKgg90