சென்னை,
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்து 3 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவு மைத்ரேயன், தனது டுவிட்டர் பதவில், அணிகள் இணைந்தாலும், மனசு இணையவில்லை என்று பதவிட்டி ருந்தமார்.
இது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்த கேள்விக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், அதிமுக எம்.பி. தம்பித்துரை, மைத்ரேயன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், மைத்ரேயன் இன்று மீண்டும் தனது டுவிட்டரில் தம்பித்துரையின் கருத்துக்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று நான் எனது முக நூல் பக்கத்தில் செய்த பதிவு குறித்து திரு. தம்பிதுரை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மைத்ரேயனின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தம்பிதுரை கூறியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. பெரும்பாலான கழக அடிமட்டத் தொண்டர்களின் உணர்வைத் தான் நான் எதிரொலித்துள்ளேன்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு நாஞ்சி சம்பத் கூறும்போது, மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.