சென்னை:

இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வயது 40 பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமாரின் உறவினரான அசோக்குமார், சென்னை அபிராமபுரத்தில் வாழ்ந்துவந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டில் தூக்க போட்டு இன்று தற்கொலை செய்துகொண்டார்.

படத்தயாரிப்பில் ஈடுபட்டதோடு, சினிமா நிறுவன புரடக்சன் மேனேஜராகவும் அசோக் செயல்பட்டு வந்தார்.

பிரபல ஃபைனான்சியர் மதுரை அன்பு என்பவரிடம் அசோக் குமார் கடன் வாங்கியிருந்ததாகவும், இதில் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மதுரை அன்புவின் மிரட்டலால் தான் தற்கொலை செய்துகொண்டதாக அன்பு எழுதி வைத்திருப்பதாகவும் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர். தற்போது அசோக்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.