தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகங்களில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் போனிகபூரை திருமணம் செய்தபின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இப்போது ஓரிரு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். பல இந்தித் திரைப்படங்களை தயாரித்து வருகிறர்.
இவரது மூத்த மகள் ஜான்வி தற்போது இந்தித் திரைப்படம் ஒன்றில் அறிமுகமாக உள்ளார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தின் பெயர் தடக் என்பதாகும். இதில் ஜான்விக்கு இணையாக பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் நடிக்கிறார்.
மராட்டிய படமான சாய்ரத் திரைப்படத்தின் இந்தி ரீமேக் இது எனக் கூறப்படுகிறது. ஆணவக் கொலைகளுக்கு எதிரான கதையமைப்பைக் கொண்ட இந்த படம் மராட்டியில் மிகவும் ஹிட்டான படம் ஆகும்.