சென்னை
ஐஏஎஸ் தேர்வில் புளூடூத் மூலம் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரிம் வழக்கு சி பி சி ஐ டிக்கு மாற்றப் பட்டுள்ளது.
யு பி எஸ் சி சார்பில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை ஐ ஏ எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் ஐ பி எஸ் அதிகாரி ஆன சபிர் கரிம் தாம் ஐ ஏ எஸ் ஆக தேர்வு எழுதினார். அவர் போலீஸ் அதிகாரி என்பதால் தேர்வு அறைக்குள் சோதனை இன்றி அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் நடவடிக்கைகளில் சந்தேகம் வந்ததால் அவரை மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அவருக்கு தெரியாமல் கண்காணித்தனர்.
அவர் வசூல்ராஜா எம் பி பி எஸ் திரைப்பட பாணியில் புளூடூத் கருவி மூலம் மனைவியிடம் கேள்விகளை சொல்லி அதற்கான பதிலை அவர் சொல்ல சொல்ல எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த நாளும் இதையே தொடர்ந்ததால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். ஐதராபாத்துக்கு தப்பி ஓடிய அவர் மனைவியும் கைது செய்யப்பட்டார்.
சபீர் கரிமுக்கு உதவியதாக முகமது சபீத் கான் என்பவரும் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இவர் சபீர்கரிமிடம் பணி புரிபவர். இதுவரை இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சபீர் கரிம் புளூடூத் மூலம் காப்பி அடித்த வழக்கு சி பி சி ஐ டிக்கு மாற்றப்பட்டுள்ளது.