போஸ்டரில் இருக்கம் நடிகர் கமல்ஹாசன்  படத்தை, சிறுவன் ஆவேசமாக கத்தியால் குத்தும் வீடியோவில் பின்னணியில் பேசியவர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக ஒரு தகவலும், அவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்று ஒரு தகவலும் உலவுகிறது.

கமல் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  “என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்” என்று கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார்.

எதற்காக இப்படிப் பதிவிட்டிருக்கறார் பலரும் குழம்பினர். அப்போது இசை என்பவரது வீடியோ வுடன் கூடிய ட்வீட்டர் பதிவை “புரியாதவர்க்கு புரியும்படியாய்” என தலைப்பிட்டு ரிவீட் செய்திருந்தார் கமல்.

அந்த பதிவில் இசை என்பவர் “இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. 😔 @ikamalhaasan நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர்” என்ற குறிப்பிட்டு வீடியோ ஒன்றை இணைத்திருந்தார்.

அந்த வீடியோ காட்சி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கமல் போஸ்டர் ஒன்று இருக்க.. அதை கத்தி வைத்து சிறுவன் ஒருவன் ஆவேசமாய் குத்திக் கிழிக்கிறான். பின்னணி குரல், “இந்து விரோதி கமல்.. அவனை நல்லா குத்து” என்று  ஆவேசமாய் வெறியேற்றுகிறது.

போஸ்டரில் இருக்கும் கமல் படத்தைத்தான் சிறுவன் ஆவேசமாக குத்துகிறான் என்றாலும், அவனுக்குள் ஊட்டப்படும் வெறி பதைபதைக்க வைக்கிறது.

இந்த நிலையில் குறிப்பிட்ட வீடியோ காரைக்கால் பகுதியில் எடுக்கப்பட்டது என்று கண்டறி யப்பட்டதாக ஒரு தகவல் உலவுகிறது. அதே போல, அந்த வீடியவை எடுத்த,  சிறுவனுக்கு வெறியேற்றிய நபரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

ஆனால் இந்த தகவலை காவல்துறை இன்னும் உறுதி செய்யவில்லை.