சென்னை,

மிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம்  மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி  நடத்தி வருகிறது.

இந்த வருடம் நடைபெற இருக்கும் குருப்-4க்கான காலி பணியிடங்கள் மற்றும் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  டிஎன்பிஎஸ்சி தெரிவித்தபடி,  குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளை ஒரே நேரத்தில், ஒரே தேர்வாக நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப்-4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017-2018-ம் ஆண்டு களுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய 9351 பணியிடங்கள் நேரடி நியமன செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது.

மொத்த காலி இடங்கள்: 9351 (தோராயமாக)

 

பணி: கிராம நிர்வாக அலுவலர் – 494

வயதுவரம்பு:  01.07.2017 தேதியின்படி 21 வயது 

பணி: இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) – 4096

பணி: இளநிலை உதவியாளர் (பிணையம்) – 205

பணி: வரித் தண்டலர் – நிலை-I – 48

பணி: நில அளவர் – 74

பணி: வரைவாளர் – 156

 தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

 பணி: தட்டச்சர் – 3463
 தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வான தமிழ் மற்றும் அங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: சுருக்கெழுத்துத் தட்டச்சர் (நிலை-III) – 815

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800)

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.</p>

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 பூர்த்திடைந்து 35க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நிரந்தரப் பதிவுக் கட்டணம்: ரூ.150. இவை 01.03.2017 தேதியின்படி திருத்தியமைக்கப்பட்ட கட்டணம். ஏற்கனவே ரூ.150 செலுத்தி நிரந்த பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், இத்தேர்வு பதிவுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை தேர்வுக்கட்டணச் சலுகை பெற தகுதியுடையவர்கள் தவிர பிற விண்ணப்ப தாரர்கள், இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது தேர்வுக்கட்டணத்தை (Net Banking, Debit Card, Credit Card) பயன்படுத்தி செலுத்தலாம் அல்லது பாதர வங்கி, இந்திய வங்கி, அஞ்சல் அலுவலகம் மூலம் செலுத்தலாம். வேண்டும்.

எழுத்துத் தேர்வு: கொள்குறி வகையிலான் 200 வினாக்கள் அடங்கிய 300 மதிப்பெண்கள் கொண்டது. 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவில் 25 வினாக்கள் மற்றும் பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் பகுதியிலிருந்து 100 வினாக்கள் இடம்பெறும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள், அவர்கள் சார்ந்த பிரிவு, காலிப்பணியிடங்கள் ஆகிய வற்றின் அடிப்படையில் பதவி, அலகு, துறை ஒதுக்கீட்டின் பொருட்டு அவர்களின் தரவரிசையின்படி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in. என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.02.2018 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2017 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 15.12.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-tamil.pdf”

http://www.tnpsc.gov.in/notifications/2017_23_ccse4-notfn-tamil.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.