சென்னை:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரெய்டு தொடங்கியபோது, தான்  எம்.பி. பென்சன் பணத்தில் வாழ்ந்து வருவதாக கூறிய டிடிவி தினகரன்,  இன்றைய பேட்டியின்போது  அரசியல்வாதினா கோமனத்தோட அலையனுமா..? சொத்து இருக்கக்கூடாது என்று மாற்றி பேசினார்.

இது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையே அவரின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மிழகம் முழுவதும் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் உறவினர்கள், நண்பர்களின்  வீடுகள் உள்பட 200க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று 3வது நாளாகவும் 40க்கும் மேற்பட்ட இடங்களில்  வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. இந்த சோதனைகளின்போது ஏராளமான சொத்து ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது நடைபெற்ற கருப்பு பண பரிமாற்றம், ஏராளமான தங்க நகைகள் உள்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 9ந்தேதி செய்தியாளர்களின் சந்திப்பின்போது, தான்  எம் பி பென்ஷன் பணத்தில்தான் வாழ்ந்து வருகிறேன் என்று கூறினார். இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ரெய்டு காரணமாக ஏராளமான சொத்து ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்தி கள் வந்துகொண்டிருக்கும் வேளையில்,

இன்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அரசியல் வாதின்னா கோமனத்தோட அலைய வேண்டுமா, சொத்து இருக்கக்கூடாது என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

அவரது நிலைப்பாடு இரண்டே நாளில் மாறியது செய்தியாளர்களிடையே பரவலாக முனுமுனுக்கப்பட்டது.

மேலும், சோதனை குறித்து வருமான வரித்துறையினருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

எங்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதை எதிர்க்கவில்லை, வரவேற்கிறேன். ஆனால், ஒரே சமயத்தில் 1800 பேரைக் கொண்டு சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

வருமான வரித்துறை சோதனைக்கு பயன்படுத்திய வாகனங்கள் ஒரே நிறுவனத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டது ஏன்?

ஏற்கனவே நடைபெற்ற சோதனையின்போது, சேகர் ரெட்டியின் நண்பர்கள், அவரது டைரியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

நான் காந்தியின் பேரன் போல பேசவில்லை. நானும் சாதாரண மனிதன் தான்.

அதேசமயம், எங்கள் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன், பேத்திகளா?

நான் தூய்மையானவன் என்று என்னால் கூற முடியும். ஆனால் என் உறவினர்கள் குறித்து என்னால் கூற இயலாது.

அரசியல்வாதிகள் என்றால்  கோவணத்துடன்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா?

வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கம் எடுத்தாலே அது கருப்பு பணம் என்று கூறமுடியாது.

புதுச்சேரியில் உள்ள எனது பண்ணை வீட்டில் பாதாள அறைகள் எதுவும் இல்லை. 

என் அப்பா எவ்வளவு பணம்  வைத்துள்ளார், எவ்வளவு சொத்து வைத்துள்ளார் என்று கேட்டால் எனக்கா தெரியும் ?  அது அவரை தான்  கேட்கணும் என  தினகரன்  காட்டமாக கேள்வி எழுப்பினார்.

.மேலும்

ஐடி அதிகாரிகள் குறித்து  தவறான தகவலை தெரிவிக்கவில்லை என்றும்,  தங்களை குற்றம் சாட்டி வருபவர்கள் காந்தியின் வாரிசுகள் அல்ல, சோதனையின்போது  பணம் தங்கம் பறிமுதல் செய்திருந்தால் அதற்கான கணக்கு சமர்பிக்கப்படும் என்றார்.

கட்சியை காப்பாற்ற  நாங்கள் போராடி வருகிறோம் , அதனை  தடுக்க  ஏதோ உள்நோக்கத்துடன் தான்  இது நடக்கிறது என குறிப்பிட்டார்.

இறுதியாக,  இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்திற்காக நடத்தப்பட்டதாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.