லக்னோ,

டும் பனி மூட்டம் காரணமாக  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஸ் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வட மாநிலங்களில் அதிக பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத சூழலி நிலவி வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பனி மூட்டம் காரணமாக வாகனங்கள்  தொடர் விபத்துக்குள்ளானதில் பலர் பலியாயினர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பனி மூட்டம் காரணமாக பஸ் டிரைவர் பஸ்சை ஆற்றுக்குள் செலுத்தி உள்ளார். இதில் அவர் பரிபதாபமாக பலியானார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா என்ற இடத்தில் உள்ள ஆற்றின் பாலத்தை கடந்து செல்லும்போது, பனி மூட்டம் காரணமாக எதிரே உள்ள பாலத்தின் கரை தெரியாமல், பஸ்  பாலத்தின் தடுப்பை உடைத்து ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]