டில்லி

வர்கலால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் பிரியாணி சமைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

டில்லியில் உள்ள ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய மொழிப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற கல்வி பெற்று வருபவர் முகமது அமீர்.  இவர் அங்குள்ள சபர்மதி மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.  இவர் பலமுறை பல்கலைக் கழக விதிகளை மீறி நடந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் பிரியாணி சமைத்துள்ளார்.   பல்கலைக்கழக விதிகளின் படி அங்கு சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் இவர் பிரியாணி சமைத்து தனது நண்பர்களுடன் அங்கேயே அமர்ந்து சாப்பிட்டு உள்ளார்.  இது விதி மீறல் என சொன்னதை அவர் லட்சியம் செய்யாமல் இருந்துள்ளார்.

இதையொட்டி அவருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் ரூ.6000 அபராதம் விதித்துள்ளது.  இந்த அபராதம் இன்னும் 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  மாணவின் எதிர்காலத்தை நினைத்து அவருக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் கூறி உள்ளார்.