டில்லி:
ஆயுள் காப்பீட்டுத் திட்ட பாலிசியுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
அரசு நலத் திட்டங்கள், சமையல் காஸ், வங்கி, செல்போன் என அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய காப்பீட்டுத் திட்ட ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (ஐஆர்டிஏ) இன்று வெளியிட்டுள்ள ஒரு சுற்றிக்கையில், ‘‘ தற்போதுள்ள பாலிசிகளுக்கான பணப் பயனை பெறுவதற்காக வாடிகையாளர்கள் தங்களுடைய ஆதார் எண், நிரந்தர கணக்கு எண் அல்லது பார்ம் 60 ஆகியவற்றை இணைப்பது கட்டாயம்’’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கான கடைசித் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் மோட்டார் வாகனங்களுக்கான காப்பீடுகளுக்கு ஆதார் எண்ணினை இணைப்பது பெரும் தலைவலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது