சென்னை:

சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரி சோதனை நடத்த திருமண விழா என்ற பெயரில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரி உள்ளிட்ட துறையினர் ரெய்டுக்கு செல்வது மிகவும் ரகசியமாக வைக்கப்படும். ரெய்டுக்கு செல்லும் அதிகாரிகளில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ரெய்டு குறித்த முழு விபரங்கள் தெரியவரும். அவ்வாறு தெரிந்தவர்களும் ரெய்டுக்கு செல்லும் இதர அலுவலர்கள் மத்தியில் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி தான் உரையாடுவார்கள். சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர்களை உ ச்சரிக்கமாட்டார்கள்.

ரெய்டுக்கு செல்லும் சமயங்களில் அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் செல்போன்களுக்கு தடை விதி க்கப்படும். ரெய்டுக்கு பல நாட்கள் முன் கூட்டியே திட்டமிடுவார்கள். ரெய்டு குறித்த தகவல் எந்த வகையிலும் வெளியில் கசிந்து விடாமல் ரகசியம் காக்கப்படும்.

பாதுகாப்பு அழைக்கப்படும் போலீசாருக்கும் கடைசி நேரத்தில் தான் எந்த இடம்? என்ற விபரம் தெரிவி க்கப்பட்டு அழைக்கப்படுவார்கள். அதற்கு முன்பு போதுமான எண்ணிக்கையில் போலீசார் தயாராக இரு க்கும்படி காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் அளித்திருப்பார்கள். ரெய்டுக்கு வாடகை கார்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த கார்களும் வெவ்வேறு பெயர்களில் முன்பதிவு செய்திருப்பார்கள்.

இந்த வகையில் தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சியினர் வீடுகளில் வருமான வரி துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். இதற்கு ‘கிளீன் பிளாக் மணி’ என்று பெயரிட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சோதனைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னரே ஃபாஸ்ட் டிராக் கால் டாக்சி நிறுவனத்தில் பெரிய பணக்காரர் வீட்டு திருமணம் என்ற பெயரில் சென்னையில் மட்டும் 350 கார்களை முன் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 355 நபர்களின் 215 சொத்துக்கள் தொடர்பாக ஒரே நேரத்தில் 67 இடங்களில் இ ந்த சோதனை இன்று காலை சுமார் 5.30 மணியளவில் தொடங்கியது. பின்னர் 188 இடங்கள் வரை இந்த சோதனை நீட்டித்தது. வருமான வரித்துறையின் 6 ஆணையர்கள் தலைமையில் இந்த சோதனை நடந்தது.

கார்களை ஏறும் போது அனைத்து டிரைவர்களிடமும், ‘‘சீனி வெட்ஸ் மஹி’’ என்ற மணமக்கள் பெயர்கள் அடங்கிய வாசகங்கள் கொண்ட அட்டை ஒன்றை கொடுத்து காரில் முன் கண்ணாடியில் ஒட்டும் தெரிவித்துள்ளனர். இதனால் கார் டிரைவர் உள்பட, கார் பயணித்த வழித்தடங்களில் யாரும் சந்தேகம் எழாத வகையில் வருமான வரித்துறையினர் செயல்பட்டுள்ளனர். மொத்தத்தில் ஒரு திருமண விழா என்ற பெயரில் சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர்.