கொல்கத்தா
ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடப்பட்ட நவ.,8 ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரெபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தனது மற்றொரு பதிவில், ஜி.எஸ்.டி., என்பது, ‘கிரேட் செல்பிஷ் டாக்ஸ்’ எனப்படும், பெரிய சுயநல வரி; இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன; தொழில்கள் பாதிக்கின்றன. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது என்று மம்தா தெரிவித்துள்ளார்.