டில்லி:
இரட்டை இலை விசாரணையை 8ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டுள்ள அதிமுக.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக விசாரணை நடந்து வருகிறது. சின்னத்தை பெற எடப்பாடி, ஓபிஎஸ் அணிக்கும், சசிகலா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

டெல்லியில்தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை 5 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. 6ம் கட்ட விசாரணை இன்று பிற்பகல் துவங்கி நடைபெற்றது. விசாரணையின் போது, எடப்பாடி, ஓபிஎஸ்-, டிடிவி தரப்பு வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் விசாரணையை 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Patrikai.com official YouTube Channel