லக்னோ,
கர்ப்பிணி பெண் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வராததால், பிரசவ வலி காரணமாக நடுரோட்டில் குழந்தையை பெற்றெடுத்தார் பெண். இந்த அவலம் பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் உ.பி. மாநிலத்தில் நடந்துள்ளது.
உ.பி. மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ளது சோனே என்ற கிராமம். அந்த பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். அந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாத தால், ஆம்புலன்சிற்கு போன் செய்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதன் காரணமாக அப்பெண்ணை அவரது உறவினர்கள் மெதுவாக நடைபயணமாக மருத்துவ மனைக்கு அழைத்துசென்றனர். அப்போது, அந்த பெண்ணிற்கு பிரசல வலி அதிகமானது.
இதன் காரணமாக, அவருக்கு நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் உ.பி.யின் சகரன்புர் என்ற மாவட்டத்தில் பிரசவ வலி காரணமாக கர்ப்பிணி ஒருவர் நள்ளிரவு மருத்துவமனை செல்லும் வழியில் ஆட்டோ ரிக்சாவிலேயே குழந்தை பிறந்த நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
பாரதியஜனதா ஆட்சி செய்து வரும் உ.பி.யில் இன்னும் பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை தேவைகள்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.